மூன்று கட்டமாக நடக்கும் தேர்தல்கள்..! பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

25 September 2020, 1:46 pm
CEC_Sunil_Arora_UpdateNews360
Quick Share

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வரவிருக்கும் தேர்தல்கள் அக்டோபர் 28, 3 மற்றும் 7 தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும்; நவம்பர் 10’ஆம் தேதி முடிவுகள் வெளியாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழலில் இந்தியாவில் நடைபெறும் முதல் மாநிலத் தேர்தல் இதுவாகும்.

பீகார் நவம்பர் 29’க்குள் புதிய 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் கொரோனா முன்னெச்சரிக்கைகள் காரணமாக தேர்தல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களில் அக்டோபர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்வேறு சட்டமன்றங்களில் காலியிடங்கள் மற்றும் மக்களவையில் உள்ள காலியிடத்தையும் நிரப்புவதற்காக தேர்தல்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிகப்படியான மழை மற்றும் தொற்றுநோய் காரணமாக இடைத்தேர்தல்கள் முன்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய் சூழல் காரணமாக, தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐந்து பேர் மட்டுமே வீடு வீடாக பிரச்சாரம் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். ரோட்ஷோக்களுக்கான வேட்பாளர் பயணத்தை ஐந்து வாகனங்களுக்கு மேல் நடத்த இது தடைசெய்துள்ளது.

இருப்பினும், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நாளுக்காக வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சம் 1,000 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்னதாக, அதிகபட்ச எண்ணிக்கை 1500 ஆக இருந்தது தற்போது கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் முககவசம் அணியுமாறு கேட்கப்படுவார்கள். வாக்களிக்கும் நேரத்தில் அடையாளம் காண மட்டும் முகக்கவசத்தை கழற்றி காட்டிவிட்டு மற்ற நேரத்தில் முககவசத்தை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 14

0

0