நாய் கூட இந்த உணவை சாப்பிடாது : தரமான சாப்பாடு இல்ல.. கையில் தட்டு ஏந்தி கண்ணீர் விட்டு அழுத காவலர்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 4:54 pm
Police Cry - Updatenews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவல்துறையினருக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது.

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீஸாருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கேண்டினுக்கு வெளியே இன்று காலை மனோஜ் குமார் என்ற காவலர் ஒருவர் கையில் உணவு தட்டை ஏந்தியபடி கதறி அழுது தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

இதனை அங்கிருந்த மற்றொரு காவலர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவலர் மனோஜ் குமார், “ஃபிரோஸாபாத் போலீஸ் கேண்டீனில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுகிறது. இங்கு போலீஸாருக்கு மிகவும் மோசமான உணவே வழங்கப்படுகிறது. சரியாக சமைக்கப்படாத சப்பாத்தியும், தண்ணீர் போன்ற பருப்புமே எங்களுக்கு தினமும் வழங்கப்படுகின்றன. உண்மையில் சொல்லப்போனால் இந்த உணவை நாய்கள் கூட சாப்பிடாது. ஆனால் இந்த உணவை தான் நாங்கள் சாப்பிடுகிறோம் என கதறி அழுத காட்சிகள் காண்போர் கண்களை ஈரமாக்கி வருகின்றன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து, ஃபிரோஸாபாத் கேண்டீனில் வழங்கப்படும் உணவு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக உ.பி. காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உணவு தரம் குறித்து புகார் கூறிய காவலர் மனோஜ் குமாரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 212

0

0