போலீஸ் வீட்டிலேயே கைவரிசையை காட்டிய பலே திருடர்கள் – மீரட்டில் தான் இந்த துயர சம்பவம்

26 February 2021, 12:04 pm
Quick Share

உ.பி. மாநிலம் மீரட்டில், குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே, திருடர்கள் புகுந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தற்போதைய நிலையில், தேசிய அளவில் முன்னிலை பெற்று வருகின்றன. இந்நிலையில், குற்றங்களை களைய உள்ள குற்றப்பிரிவு போலீசின் வீட்டிலேயே, மர்மநபர்கள், தங்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உ.பி. மாநிலம் மீரட் அருகே கார்கவுடா பகுதியில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷரிதா தியாகியின் வீடு உள்ளது. அவர் தற்போது ஷாம்லி பகுதியில் பணியமர்த்தப்பட்டு இருப்பதால், அவரது வீடு பல மாதங்களாகவே, பூட்டிய நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு, இந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், நகைகள், பணம், ஸ்கூட்டர், டியுப்வெல் இஞ்ஜின் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புகள் கொண்ட உடைமைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த ஷரிதா தியாகி, அப்பகுதி போலீஸ் ஸ்டேசனில் திருட்டு தொடர்பாக புகார் அளித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு, மீரட் பகுதியிலேயே,நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியான சவுரவ் பன்சலை தாக்கிய மர்மநபர்கள், அவரிடமிருந்த பொருட்களை பறித்து சென்று இருந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த நிலையிலும்,குற்றவாளிகள் தொடர்பான ஒரு க்ளுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0