71 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிர் : டெல்லியை புரட்டி போட்ட பனி!!

30 November 2020, 2:31 pm
Delhi Fog- Updatenews360
Quick Share

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிர் நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர் காலம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த 1949 நவம்பர் மாதம் டெல்லியில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலையாக 10.2 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

அதன் பின் தற்போது அதே வெப்பநிலை பதிவாகியுள்ளமதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக டெல்லியல் சராசரியாக 12.9 செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இதற்கு முன்னர் 1938ல் 9.6 டிகிரியும், 1931ஆம் ஆண்டு 9 டிகிரியும், 1930ஆம்ஆண்டு 8.9 கிரியும் பதிவானது. வெப்ப நிலை குறைந்ததால், டெல்லியில் கடந்த 3,20, 23 மற்றும் 24ஆம் தேதிகளில் குளிர் அலை வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 23

0

0