முதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு : பல்கலை.,களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!

3 September 2020, 1:06 pm
Quick Share

செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் போடப்பட்ட ஊடரங்கு தளர்த்தபட்டு வருவதால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா காரணமாக, கல்லுரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்தது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் கல்லுரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என அறிவித்தது.

அதை தொடர்ந்து யு.ஜி.சி கல்லுரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநில அரசுகள் தேர்வுகளை நடத்த தயாராகி வருகிறது.

இந்நிலையில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Views: - 0

0

0