நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!

17 August 2020, 10:36 am
Quick Share

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்களின் எதிர்காலம் குறித்து தன்னார்வ அமைப்பு ஒன்று இணையவழி நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :-

பதிவு செய்யப்படாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசால் அளிக்கப்படும் சலுகைகளை அந்த நிறுவனங்கள் பெற முடியும்.

இதேபோல சிறு வணிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் என்ஜிஓ போன்றவற்றின் உதவியுடன் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு 30 சதவீத மாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலமான ஜிடிபி பங்களிப்பு 50 சதவீதமாக உயரும்.

அதேபோல ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ-க்களின் பங்கு 48 சதவீத மாக உள்ளது. இதுவரை இத்துறை மூலம் 11 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு உயரும் என்று நம்புகிறோம். ஏற்றுமதி பங்களிப்பு அதிகரிக்கும்போது 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட்களுக்கு மாற்று பொருட்களை நாம் ஆராய வேண்டும். அதேநேரத்தில் ஏற்று மதியை அதிகப்படுத்த வேண்டும்.

நாட் டில் அந்நிய முதலீடுகள் பெருக வேண் டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்தியாவை பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த நாடாக உருவாக்க முடியும். கிராமப் புற மக்களை மேம்படுத்தும் நட வடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அவர்கள் சுயசார்பு நிலையை எட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.