பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிய வரி விதித்த மத்திய அரசு..! விலை மேலும் உயர வாய்ப்பு..?
1 February 2021, 2:12 pmநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பெட்ரோலில் லிட்டருக்கு ரூ 2.5 மற்றும் டீசலுக்கு ரூ 4 விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த செஸ் அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சிரமத்தை அளிக்கும் ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை சமீபத்தில் ரூ 86’ஐ தாண்டியதால் நுகர்வோருக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. நிதி தலைநகரமாக கருதப்படும் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 93’ஐ எட்டியது.
டீசலைப் பொறுத்தவரை, டெல்லியில் விலை ரூ 76’ஐ தாண்டியுள்ளது. அதே நேரத்தில் மும்பையில் ரூ 83’ஐ தாண்டியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானியர்கள் புதிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக, அடிப்படை கலால் வரி (பிஇடி) மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஒட்டுமொத்தமாக வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை இருக்காது எனக் கூறப்படுகிறது.
0
0
1 thought on “பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிய வரி விதித்த மத்திய அரசு..! விலை மேலும் உயர வாய்ப்பு..?”
Comments are closed.