திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு : இரண்டு மாதங்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன் குறித்து முக்கிய அறிவிப்பு… இதெல்லாம் கட்டாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 5:31 pm

திருப்பதி : ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் அனைவரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் நெகட்டிவ் என்ற நிலையில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!