நிதிஷ்குமார் கட்சியில் இணைந்தார் பீகார் முன்னாள் டிஜிபி..! மக்களவை சீட் உறுதி..?

27 September 2020, 5:42 pm
Bihar_Ex_DGP_Joins_JDU_Updatenews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையைச் சுற்றியுள்ள சர்ச்சையின் மையத்தில் இருந்த குப்தேஷ்வர் பாண்டே, காவல்துறை சேவைகளில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஊகங்களைத் தூண்டிய நிலையில் தற்போது ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளார்.

முன்னதாக நேற்று, பாண்டே பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து அவருடன் 30 நிமிடங்கள் உரையாடினார். கட்சி வட்டாரங்களின் கருத்துப்படி குப்தேஷ்வர் பாண்டே பக்ஸர் தொகுதியிலிருந்தோ வால்மீகி நகர் தொகுதியிலிருந்தோ மக்களவைக்கு போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் ஆதரவை பெரும்பாலும் யாதவ் அல்லாத ஓபிசி மற்றும் பாஸ்மாண்டா முஸ்லிம்களிடமிருந்து பெறுகிறது. பாண்டேவை கட்சிக்குள் கொண்டுவருவதன் மூலம் அது பிராமணர்களையும் அடைய முடியும் என்று கட்சி நம்புகிறது. பாரம்பரியமாக காங்கிரஸின் ஆதரவாளர்களான பாண்டேக்கள் பின்னர் பாஜகவை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

குப்தேஷ்வர் பாண்டே நிதீஷ் குமாரின் ஆதரவாளராக இருந்து வருகிறார். மேலும் நடிகை ரியா சக்ரவர்த்தி குறித்த பாலியல் கருத்துக்கள் குறித்து விமர்சிக்கப்பட்டார்.

பாட்னாவில் பிறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை விசாரிக்க மும்பைக்கு சென்ற பீகார் போலீஸ் குழுவுக்கு ஒத்துழைக்காததை கண்டித்து பாண்டே சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0