பிரணாப் முகர்ஜி இப்போது எப்படி உள்ளார்…? மகனின் ஹேப்பி மெசேஜ்
19 August 2020, 10:15 amடெல்லி: தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் கூறி உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கொரோனா சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படுகிறது.
13ம் தேதி முதல் பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார், கோமாவில் இருக்கிறார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில், பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது. தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.