திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து..விடாப்பிடியாக போராடிய பக்தர்கள் : விழிபிதுங்கிய விஜிலென்ஸ்.. டிக்கெட் இல்லாமல் தரிசிக்க அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 1:33 pm
Tirupathi Devotees Allowed -Updatenews360
Quick Share

ஆந்திரா : தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே திருப்பதி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இலவச டோக்கன்களை வாங்குவதற்காக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

எனவே பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் விஜிலன்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பக்தர்கள் எனவே அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டி அடிப்பது சரியான செயலாக இருக்காது .

எனவே அவர்களை சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடித்தனர் .

எனவே வேறு வழியில்லாத நிலையில் டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் திருமலைக்கு செல்லலாம் என்று தேவஸ்தான்ச் ஊழியர்கள் பக்தர்களை திருமலைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 970

0

0