டெல்லியில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பெற்றோர் அனுமதி அவசியம்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
27 August 2021, 5:56 pm
Delhi School - Updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும், செப்டம்பர் 8ம் தேதி முதல் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லி கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடியா கூறியதாவது,

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 – 12ம் வகுப்புக்கான வகுப்புகள் அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மற்றும் எந்த ஒரு மாணவரும் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தவில்லை.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றார். செப்டம்பர் 8ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 273

0

0