25 பேர் மரணத்திற்கு காரணமான காண்ட்ராக்டர் தலைமுறைவு..! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

5 January 2021, 2:23 pm
Contractor_Ajay_Tiyagi_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் உள்ள சுடுகாட்டுக்கூரையின் பிரதான காண்ட்ராக்டர் அஜய் தியாகியை காஜியாபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அங்கு கட்டமைப்பின் கூரை இடிந்து 25 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் நடந்த பிறகு தலைமறைவாக இருந்த அஜய் தியாகி ஒரு நாள் தேடுதல் தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். முராத்நகரில் ரகசிய இடத்தில் ஒளிந்திருந்த நிலையில், காஜியாபாத் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

“36 மணிநேர தேடலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என்று காஜியாபாத்தின் எஸ்எஸ்பி கலாநிதி நைதானி கூறினார்.

தியாகியின் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 25,000 பரிசுத் தொகையையும் உத்தரபிரதேச போலீஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தியாகி மற்றும் முராத்நகர் மாநகராட்சியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் நிஹாரிகா சிங் (முராத்நகர் நகர் பாலிகாவின் நிர்வாக அதிகாரி), ஜூனியர் என்ஜினீயர் சந்திரபால் மற்றும் சூப்பர்வைசர் ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. ஒரு பழ விற்பனையாளரின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வந்த சுமார் 50 பேர், மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட கூரையின் கீழ் தஞ்சமடைந்தனர். 

இருப்பினும், சில நிமிடங்கள் கழித்து, கூரை இடிந்து விழுந்தது. அவர்கள் அனைவரும் இடிபாடுகளின் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களில் 25 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.  

Views: - 0

0

0