நல்ல நாள் அதுவுமா அந்த விஷயத்தை பத்தி பேசமாட்டேன் : பிறந்தநாளன்று ஏழுமலையானை வழிபட்ட முன்னாள் பிரதமர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 11:01 am
Devegowda - Updatenews360
Quick Share

ஆந்திரா : பிறந்த நாளில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது மனைவியுடன் ஏழுமலையானை வழிபட்டார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தன்னுடைய 89 வது பிறந்த நாளான இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த தேவகவுடா இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்று அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில் அர்ச்சகர்கள் தேவகவுடா தம்பதிக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசி வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி பிரச்சனை நீண்ட கால பிரச்சனை. மேகதாதுவில் அணை கட்டுவதில் ஏற்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி புண்ணியத் தலமான திருப்பதி மலையில் நான் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

Views: - 322

0

0