மராட்டியம் அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: 11 நோயாளிகள் உடல்கருகி உயிரிழப்பு..!!
Author: Aarthi Sivakumar6 November 2021, 3:20 pm
மும்பை: மராட்டிய மாநிலம் அகமது நகரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், நோயாளிகள் உள்பட 11 பேர் பலியானார்கள்.
விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என கூறப்படுகிறது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தீயானது அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவரவில்லை.
0
0