பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு: நீட் விலக்கு குறித்து ஆலோசனை…?

Author: Udhayakumar Raman
23 October 2021, 10:28 pm
Quick Share

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த அக்டோபர் 13-ந்தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்ச அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Views: - 188

0

0