முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்…! அதிரடி காட்டிய மாநில அரசு
10 August 2020, 7:09 pmகுஜராத்: குஜராத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அறிவிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ,1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் தான் இன்னமும் இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆகையால் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கைகளை கழுவுதல் போன்றவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலாகும்.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக பின்பற்றி வருகின்றன. விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 500ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் மக்கள் முகக்கவசம் அணியாததால் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
இந் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் இப்போது அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 500லிருந்து 1,000ம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
1 thought on “முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்…! அதிரடி காட்டிய மாநில அரசு”
Comments are closed.