உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 6:07 pm
Quick Share

டேராடூன்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் வருகிற 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் தொடரும் கனமழை : மேலும் 2 தினங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை  பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதேபோன்று, இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 18ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கனமழை: 9 பேர் பலி - Rain related issues: 9 dead in uttarkhand  | Samayam Tamil

இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் நாளை ஒரு நாள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதனால் ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு வியாழன் முதல் திங்கள் வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Views: - 217

0

0