கர்நாடகாவில் தொடர் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் விமான நிலையம்..டிராக்டரில் செல்லும் பயணிகள்..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 6:07 pm
Quick Share

கர்நாடகா: தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது.

இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் பயணிகள் சென்று வருகிறார்கள். அதேபோல் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Views: - 543

0

0