கேரளாவில் கனமழை : மலையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

11 September 2020, 6:15 pm
Quick Share

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வரும் 14ஆம் தேதி 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து வானிலை ஆய்வு மையம், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே போல் மற்ற மாவட்டங்களில் 14-ந் தேதி வரை லேசானது முதல் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மலையோர பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0