ஓடும் லாரியில் கொள்ளையடித்த நெடுஞ்சாலை திருடர்கள் : பதைபதைக்க வைத்த காட்சி!!

5 October 2020, 11:29 am
Lorry Theft - updatenews360
Quick Share

ஆந்திரா: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் செல்போன் லோடுடன் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியில் கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்போன்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் புகுந்த கும்பல் கடந்த மாதம் செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக குண்டூர் எஸ்.பி. அம்மி ரெட்டி, இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் தலைமையில் தலைமையிலான சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மத்திய பிரதேச மாநிலம் தேவ்வாஸ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் ஓடும் லாரியில் புகுந்து செல்போன் கொள்ளையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ரவி மற்றும் ஷாருக் கான் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு லாரி, ஒரு கார், தெலுங்கானாவின் மேடக் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் கொள்ளை அடிக்கப்பட ரூ. 3.13 கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்ற லாரியை ஆந்திர மாநிலம் நகிரி அருகே லாரியை வழிமடக்கி கொள்ளை அடித்த கஞ்சர்பாத்தை சேர்ந்த கும்பலை கடந்த வாரம் போலீசார் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று பல்வேறு இடங்களில் இந்த கொள்ளை கும்பல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை குறிவைத்து பின் தொடர்ந்து இரு சக்கர வாகனம் மற்றும் காரில் சென்று லாரியின் வேகத்திற்கு ஏற்ப தங்களது பைக் மற்றும் காரை ஓட்டிச் சென்று ஓடும் லாரியில் கண்டெய்னரில் சீலை கட் செய்து அதனுள் சென்று கொள்ளையில் ஈடுபட்டு வருவது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான சிசிடிவி காட்சி ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை எஸ்.பி. அம்மி ரெட்டி வெளியிட்டார்.

Views: - 40

0

0