அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 6 மாத கர்ப்பிணியான செவிலியர் பலி!!

Author: Udayachandran
5 October 2020, 3:03 pm
Andhra Nurse Dead - updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி பத்மாவதி அரசு கோவிட் மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாத கர்பினி ஆன ஒப்பந்த செவிலியர் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனை சமீபத்தில் பத்மாவதி கோவிட் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் பத்மாவதி கோவிட் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஒப்பந்த முறையில் செவிலியராக பணி புரிந்து வந்தவர் ராதிகா. ராதிகா வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வெளியே ராதிகா நின்று கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையின் நுழைவு வாயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாத கர்ப்பிணியான செவிலியர் ராதிகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

மேலும் கொரோனா நோயாளிகள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறு மாத கர்ப்பமாக இருந்தாலும் ராதிகா தனது செவிலியர் பணியில் ஈடுபட்டு கொரோனா நோயாளிகளுக்கு சேவை அளித்து வந்தார். இந்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்து ராதிகா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 56

0

0