2000 ரூபாய் லஞ்சத்திற்கு 2 வருடம் சிறைத் தண்டனை..! ஹைதராபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

25 August 2020, 4:35 pm
bribe_updatenews360
Quick Share

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜி.எச்.எம்.சி) அலுவலகத்தில், ரூ 2000 லஞ்சம் பெற்றதற்காக பில் கலெக்டருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, 2008’ஆம் ஆண்டு அக்டோபர் 21’ஆம் தேதி, பாலாஜி நகரில் உள்ள ஜிஹெச்எம்சி அலுவலகத்தில் பில் கலெக்டரான திருநகரி வெங்கடேஷ் புகார் அளித்த ராமச்சந்திர ராவிடம் ரூ 2,000 லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான ஜி.எச்.எம்.சி.யின் தனியார் ஊழியர்கடாம் ரவீந்தர் ராவ், ரூ 2,000 லஞ்சத் தொகையை பெற வெங்கடேசுக்கு உதவியதாக தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24, 2020 அன்று, ஹைதராபாத்தின் ஊழல் வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி சம்பசிவ ராவ் தீர்ப்பை அறிவித்து திருநகரி வெங்கடேஷ் மற்றும் கடாம் ரவீந்தர் ராவ் ஆகியோரை தண்டித்தார்.

அதன்படி, வெங்கடேஷுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும், பி.சி.யின் 12’வது பிரிவின் கீழ் குற்றத்திற்காக ரூ 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இரண்டு மாத காலத்திற்கு சிறைத்தண்டனை விதி ரூ 1000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 30

0

0