லீவு போட்டால் அந்த மாத ஊதியமே வழங்கமுடியாது? அரசு ஊழியர்களுக்கு புதிய சிக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan27 ஜூன் 2023, 1:15 மணி
லீவு போட்டால் அந்த மாத ஊதியமே வழங்கமுடியாது? அரசு ஊழியர்களுக்கு புதிய சிக்கல்!!
மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்களாகியும் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பாமல் அங்கங்கே கலவரம் தொடர்ந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக பலர் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர். அரசு ஊழியர்களும் அடங்குவர்.
இதுகுறித்து தான் ஓர் தகவல் பரவி வருகிறது. அதாவது, மணிப்பூர் மாநில அரசு, ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் தரமுடியாது என்ற நிலைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக பணிக்கு திரும்ப முடியாதவர்கள் வரும் 28ஆம் தேத்தித்குள் அந்தந்த ஊழியர்களின் தலைமைக்கு பணிக்கு வர இயலாத காரணத்தை கூற வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊதியம் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் மணிப்பூர் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர் .
0
0