இளம்பெண்ணின் அந்தரங்க லீலைகளை உடைத்த திருட்டு பயல்… ரகசிய காதலனை தீர்த்துக்கட்டிய ரகசிய நண்பன் : உயிரை பறித்த உல்லாசக் கதை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 5:29 pm
Telangana Illegal Affair Murder -Updatenews360
Quick Share

தெலுங்கானா : தன்னுடைய அந்தரங்க லீலைகள் வெளியில் தெரியாமல் தவிர்க்க ரகசிய காதலனை ரகசிய நண்பன் மூலம் தீர்த்துக்கட்டிய 4 மாத கர்ப்பிணியை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஸ்வேதா. இவர் பெங்களூவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடன் பணிபுரிந்தவருடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஸ்வேதாவுக்கு புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவர் நண்பராக அறிமுகமானார். கடந்த 24ஆம் தேதி தனது கணவருக்கு தெரியாமல் காதலர் அஸ்மகுமாருடன் ஸ்வேதா டேட்டிங் சென்றுள்ளார்.

அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சுத்தியால் தாக்கியதில் அஸ்மகுமார் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 6ஆம் தேதி பலியானார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அஸ்மகுமாருடன் சென்ற ஸ்வேதாவை விசாரித்தனர். அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர் தனது முகநூல் காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவை செல்போனில் தொடர்பு கொண்ட அஸ்மகுமார் ஆடையின்றி வீடியோ கால் வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

காதலனின் கோரிக்கையை தவிர்க்க இயலாத ஸ்வேதா அதேபோல் செய்தார். இதை பயன்படுத்திக்கொண்ட அஸ்மகுமார் கடந்த ஒரு மாதகாலமாக தன்னை திருமணம் செய்யும் படி வற்புறுத்திவந்துள்ளார்.

எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது உனக்கு தெரியும். தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கூறி ஸ்வேதா தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், கணவன் ஆகியோருக்கு அனுப்பி விடுவேன் என்று கூறி சுவேதாவை மிரட்டி வந்தார் அஸ்மகுமார்.

அஸ்மகுமாரின் டார்ச்சர் உச்சம் பெற, தொல்லை தாங்க முடியாத ஸ்வேதா, அவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். அதற்கு தனது முகநூல் காதலனான அசோக்கிடம் இதை பெற்றி கூறியுள்ளார்.

அசோக்

இருவரும் அஸ்மகுமாரை கொலை செய்ய பலே திட்டம் தீட்டினர். அசோக் என்பவரை ஐதராபாத்தில் உள்ள பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு ஸ்வேதா வரவழைத்தார். அங்கு தன்னுடைய கொலை திட்டம் பற்றி அசோக்கிடம் ஸ்வேதா தெரிவித்தார். இரண்டு பேரும் சேர்ந்து அஸ்மகுமாரை கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 24ம் தேதி பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு அஸ்மகுமாரை டேட்டிங் அழைத்து சென்ற ஸ்வேதா, தனது திட்டப்படி அங்கு முன்னதாக காத்திருந்த முகநூல் காதலன் அசோக்குடன் சேர்ந்தது கத்தியால் நான்குமுறை தலையில் தாக்கி கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைக்காக அசோக் தன்னுடைய நண்பரான கார்த்திக்கை உடன் சேர்த்துள்ளார்.

கார்த்திக்

இதையடுத்து ஸ்வேதா,அசோக், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். கணவன் இருந்தும் அவருக்கு துரோகம் செய்து இது போன்ற தகாத உறவுகள் வைத்தால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.

Views: - 659

0

0