ருத்ர தாண்டவம் ஆடும் “ருத்ரம்”..! எதிரி ரேடார்களை முடக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி..! டிஆர்டிஓ அசத்தல்..!

Author: Sekar
9 October 2020, 2:05 pm
RUDRAM_UpdateNews360
Quick Share

கிழக்கு கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் ருத்ரம் எனும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு வான்வெளியில் மேலாதிக்கம் மற்றும் தந்திரோபாய திறனை வழங்கும்.

இது முதன்மையாக எதிரி வான் பாதுகாப்புகளை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், ட்ராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து ஏவப்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அதிவேக ஏவுகணை, இந்திய விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில், இந்த வகையில் முதல் ஆயுதமாக இணைக்கப்படுகிறது. இதற்கு முன் இது போன்ற ஏவுகணைகளை இந்திய விமானப்படை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 5.5 மீட்டர் நீளம் மற்றும் 140 கிலோ கிருசிபார்ம் இறக்கை மேற்பரப்புடன் எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி செய்லபடும் வகையில், அஸ்ட்ரா பி.வி.ஆர்.ஏ.எம் போன்று செயல்படும் தன்மை கொண்டது.

இதையடுத்து ராஜ்நாத் சிங் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்கு, டிஆர்டிஓ மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Views: - 57

0

0