வியட்நாமுடனான ஹைட்ரோகிராபி ஒப்பந்தம் கையெழுத்தானது..! சீனக் கப்பல்களை கண்காணிக்க இந்தியா பலே திட்டம்..?

27 November 2020, 4:53 pm
Rajnath_SIngh_UpdateNews360
Quick Share

இந்தியாவும் வியட்நாமும் இன்று ஹைட்ரோகிராபி தொடர்பான அமலாக்க ஒப்பந்தத்தில் (ஐஏ) கையெழுத்திட்டன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ சுவான் லிச் இடையே நடந்த வீடியோ கான்பெரன்ஸ் இருதரப்பு சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

“இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச் முன்னிலையில் இன்று ஒரு மெய்நிகர் இருதரப்பு சந்திப்பின் போது ஹைட்ரோகிராபி தொடர்பான நடைமுறை ஒப்பந்தம் (ஐஏ) கையெழுத்தானது” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் ட்வீட் செய்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், “ஒரு மெய்நிகர் இருதரப்பு சந்திப்பின் போது எனது வியட்நாமிய பிரதிநிதி ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ஒரு பயனுள்ள தொடர்பு இருந்தது” என்று ட்வீட் செய்துள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டு மற்றும் நட்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.” என்று அவர் கூறினார்.

ஹைட்ரோகிராபி அமலாக்க ஒப்பந்தம் என்பது இரு தரப்புக்கும் இடையேயான கடல் சார்ந்த பாதுகாப்பு மேலாண்மைக்கானது. சீனாவுடனான  தற்போதைய சூழ்நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம், தென்கிழக்காசிய நாடுகளில் சீனக் கப்பல்களை எளிதாக இந்தியாவால் கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

1 thought on “வியட்நாமுடனான ஹைட்ரோகிராபி ஒப்பந்தம் கையெழுத்தானது..! சீனக் கப்பல்களை கண்காணிக்க இந்தியா பலே திட்டம்..?

Comments are closed.