காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆயுதக் கடத்தல் முறியடிப்பு..! இந்திய ராணுவம் அதிரடி..!

By: Sekar
10 October 2020, 12:41 pm
Weapons_Seized_Indian_Army_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஆயுதங்களை இந்தியாவிற்குள் கடத்த மேற்கொண்ட புதிய முயற்சிகளை இந்திய பாதுகாப்பு படைகள் முறியடித்தன.

கிஷன்கங்கா ஆற்றின் கரையில் சந்தேகத்திற்குரிய வகையிலான நடமாட்டத்தைக் கண்டறிந்த பின்னர், இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியது. மேலும் 2-3 பயங்கரவாதிகள் ஆற்றின் அக்கரையிலிருந்து கயிற்றில் கட்டப்பட்ட குழாயில் சில பொருட்களைக் கொண்டு செல்ல முயன்றது கண்டறியப்பட்டது.

இந்திய வீரர்கள் அந்த இடத்தை அடைந்து நான்கு ஏ.கே 74 துப்பாக்கிகள், எட்டு மேகஸின்கள் மற்றும் 240 ஏ.கே. துப்பாக்கி வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை மீட்டனர்.

வெற்றிகரமான நடவடிக்கைக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஜி.ஓ.சி சினார் கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, “எங்கள் வீரர்கள் கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானால் கடத்தப்பட்ட ஆயுதங்களை பிடித்தன. இதன் மூலம் பாகிஸ்தானின் நோக்கம் எப்போதும் ஒன்றே என்பதை இது காட்டுகிறது. எதிர்காலத்திலும் அவர்களின் தவறான நோக்கங்களை எதிர்த்துப் போராடுவோம்.” எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் படைகள் ஊடுருவலை பெருமளவில் தடுக்க முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்களின் எண்ணிக்கை 130’ஆக இருந்தது. இந்த ஆண்டு இது 30’க்கும் குறைவாக உள்ளது. இது உள் நிலைமையை மேம்படுத்தவும் உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜு கூறினார்.

புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்குள் அனுப்பத் தயாராக சுமார் 250-300 பயங்கரவாதிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Views: - 39

0

0