நடுவானில் பிறந்த குழந்தை: விமான நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!!

8 October 2020, 12:39 pm
Quick Share

கர்ப்பிணி ஒருவர் விமானத்திலேயே பிரசிவித்த குழந்தைக்கு விமான நிறுவனம் சார்பில் அன்பு பரிசு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு இன்டிகோ 6 இ 122 விமானம் நேற்று புறப்பட்டது. அப்போது அதில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உதவியால் அந்த பெண் ஆண்குழந்தையை பிரசவித்தார். இந்த தகவலை இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த குழந்தை விமானத்திலேயே பிறந்ததால், அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச டிக்கெட்டை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது இன்டிகோ நிறுவனம்.

indico flight baby333 - updatenew360

தற்போது, விமான ஊழியர்கள் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 30

0

0