ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் : ஆந்திராவில் 15 பேர் கைது!!

By: Udayachandran
16 October 2020, 1:21 pm
Andhra IPL Gambling - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அரகே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்த போலீசார் இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட எஸ்பி செந்தில் குமார் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் முருகம்பட்டு பகுதியில் இளைஞர்கள் ஒன்றாகக்கூடி சூதாட்டத்தில் ஈடுபடுவது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடத்தியது தெரிய வந்தது.

சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடிய 15 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 33

0

0