கர்நாடகா முதலமைச்சர் மாற்றும் விவகாரம் : எடியூரப்பாவிற்கு க்ரீன் சிக்னல் காட்டியது பாஜக மேலிடம்..!!

11 June 2021, 10:52 am
Edyurappa- updatenews360
Quick Share

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்றும் விவகாரத்தில் டெல்லி பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி வேறு முதல்வரை நியமிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

எடியூரப்பாவை மாற்ற சில பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை கட்சி மேலிடம் மாற்ற விரும்புவதாக அவ்வப்போது செய்திகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே, கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன் என்று எடியூரப்பா கூறினார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் நல்ல ஆட்சி வழங்கி வரும் எடியூரப்பாவே முதலமைச்சராக தொடருவார் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் அவர் திறம்படச் செயலாற்றியுள்ளார். எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை கேட்பது தொடர்பாக எந்தவித விவாதமும் நடத்தப்படவில்லை. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை அரவணைத்து செல்லும் எடியூரப்பாவே முதலமைச்சராக நீடிப்பார். அவரை மாற்ற வேண்டும் என்னும் விதமான பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லை, எனக் கூறினார்.

Views: - 166

0

0

Leave a Reply