கேரளாவில் இருந்து வர்ரீங்களா…. அப்போ கட்டாயம் நீங்க வச்சிருக்கனும் : கரார் காட்டும் கர்நாடகா..!!

2 July 2021, 11:56 am
karnataka gvt - updatenews360
Quick Share

கேரளாவில் இருந்து வருபவர்பகள் கட்டாயம் கொரோனா நெகட்டீவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.

அதேவேளையில், கர்நாடகாவில் தொற்று பரவல் குறைந்திருந்தாலும், சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

72 மணி நேரத்திற்கு மிகாமல் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழாக இருக்க வேண்டும் என்றும் விமானம், ரெயில், பஸ்களில் வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அப்படியில்லையெனில், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அதுகுறித்த சான்றிதழை காட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Views: - 133

0

0