இனி வீட்டில் மதுபானம் வைத்திருக்க தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்..! கலால் விதிகளில் திருத்தம் செய்தது மாநில அரசு..!

25 January 2021, 12:34 pm
liquor_uttar_pradesh_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் நீங்கள் வீட்டிலேயே ஒரு தனிப்பட்ட பார் அல்லது குறிப்பிடத்தக்க அளவு மதுபானங்களை வைத்திருக்க விரும்பினால், மாநில அரசிடமிருந்து தனி உரிமம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் திருத்தப்பட்ட கலால் வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை வரம்பை மீறி மதுபானங்களை வாங்கவோ, கொண்டு செல்லவோ அல்லது வைத்திருக்கவோ உரிமம் பெற வேண்டும்.

ஒரு நபருக்கு 6 லிட்டர் மதுபானம் மட்டுமே வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை விட அதிகமான மதுபானங்களை வாங்குவதற்கோ, எடுத்துச் செல்வதற்கோ அல்லது வீட்டில் வைத்திருக்கவோ கலால் துறையிடம் உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியார் பார்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட நுகர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட மதுபானங்களை வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் ரூ 12,000 செலுத்தி உரிமம் பெற வேண்டும் மற்றும் பாதுகாப்பு வைப்பு தொகையாக 51,000 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உத்தரப்பிரதேச அரசு சில்லறை மதுபான விற்பனையாளர்களுக்கான உரிமக் கட்டணத்தை 7.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானத்திற்கான விலை, 750 மில்லி கொண்ட ஒரு பாட்டில் பிராண்டைப் பொறுத்து ரூ 20 முதல் 40 வரை கூடுதலாக செலவாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஆல்கஹால் அளவு குறைவாக உள்ள மதுபானங்களை ஊக்குவிக்க, புதிய கொள்கை பீர் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்களைக் கொண்டு மாநிலத்திற்குள் மது தயாரிப்பவர்களுக்கு கலால் வரியிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.

Views: - 6

0

0