முல்லைப்பெரியாறு அணை பலவீனமா இருக்கா..? நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
26 October 2021, 1:10 pm
Mullai dam - kerala cm pinarayi vijayan - updatenews360
Quick Share

கேரளா : முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வதந்தியான கருத்துக்களை பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, அணையில் 142 அடி வரை தண்ணீரை சேமிக்கலாம். அதன்பிறகு, அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். தற்போது, கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கேரள அரசு, தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Mullai Periyar dam- Updatenews360

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை நிரம்பினால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்றும், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி எங்களை காப்பாற்றுங்கள் என கேரள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், 100 ஆண்டுகளுக்கும் பழமையான முல்லைப்பெரியாறு அணையை கைவிட வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இந்தத் தகவல் வதந்தி என்று கூறப்படுகிறது. இருப்பினும், கேரளாவின் பிரபலங்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், நடிகர் பிருத்வி ராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் 125 ஆண்டுகள் பழமையான அணையை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்றும், அரசியல், பொருளாதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எது சரியானதோ அதை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

kerala cm - pinarayi vijayan - pritvi raj - updatenews360

உண்மை எது, வதந்தி எது..? என்று புரியாமல் சமூகவலைதளங்களில் வைரலான விஷயத்திற்காக பிரபலங்களின் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், மு‌ல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கேள்வி எழுப்பினார்.

Kerala cm -updatenews360

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது :- மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் உயிரிழக்க போவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் வதந்தியான தகவலை பரப்புகின்றனர். மு‌ல்லைப் பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது. பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது, எனக் கூறினார்.

Views: - 286

0

0