கேரள தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷிற்கு ஜாமீன்!!

Author: kavin kumar
2 November 2021, 8:22 pm
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல், நாட்டையே புரட்டி போட்டது. இந்த வழக்கில் சிவசங்கரன், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேரை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்து, விசாரணை நடத்திவந்தது. இதையடுத்து அவர்கள்மீது உபா சட்டமும் பாய்ந்தது. மேலும் விசாரணையில், ஸ்வப்னா சுரேத் மற்றும் சரித் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் தங்களது கடந்தகால தொடர்பை பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டு, தங்கத்தை கடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் ஜாமின் கோரிய விசாரண நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, முக்கிய மற்றும் முன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ரூ. 25 லட்சம் ஜாமீன் பத்திரம் மற்றும் 2 சால்வென்ட் ஜாமீனில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Views: - 265

1

0