கேரளாவில் மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா…! 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Author: Udhayakumar Raman
16 September 2021, 10:38 pm
TN corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மாநிலத்தில் 30 ஆயிரமாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.இந்தநிலையில், கேரளாவில் இன்று புதிதாக மேலும் 22,182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 42,36,309 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23,165 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Views: - 190

0

0