முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 8:59 am
Quick Share

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Views: - 283

0

0