லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் குற்றவாளி..! ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி..!

2 November 2020, 2:35 pm
m_sivasankar_updatenews360
Quick Share

வடக்கஞ்சேரி லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரை இன்று விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை ஆணையம் திருவனந்தபுரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர் மற்றும் லைஃப் மிஷன் வீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள யூனிடாக் பில்டர்கள் மற்றும் சானே வென்ச்சர்ஸ் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சில நாட்களில் சிவசங்கர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

எம் சிவசங்கர் இந்த திட்டத்திற்கு அரசாங்க ஒப்புதல் பெறுவதற்காக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பிறரிடமிருந்து ஒரு கமிஷனைப் பெற்றதாக ஊழல் தடுப்பு ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லைஃப் மிஷன் என்பது வீடற்ற மற்றும் நிலமற்றவர்களுக்கான கேரள அரசின் வீட்டுத் திட்டமாகும். மேலும் வடக்கஞ்சேரியில் ஒரு மருத்துவமனை திட்டமும் இதன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் எதிர்க்கட்சிகள் பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கமிஷனாக பெரும் தொகையை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன.

Views: - 30

0

0

1 thought on “லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் குற்றவாளி..! ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி..!

Comments are closed.