மாடு மேய்க்க சென்ற போது மின்னல் தாக்கி விவசாயிகள் பலி : ஒரே நாளில் 8 பேர் பலியான சோகம்!!

9 July 2021, 9:55 am
Lightning 8 Dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஆதிலாபாத், நிர்மல் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத், நிர்மல் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை விவசாய நிலத்திற்கு லட்சுமணன் என்ற விவசாயி மாடுகளை மேய்ப்பதற்கு சென்ற போது மின்னல் தாக்கியதில் இரண்டு மாடுகள் உட்பட லக்ஷ்மணனும் உடல் கருகி உயிரிழந்தார்.

அதேபோல் அருகிலுள்ள மண்டலங்களிலும் இடி மின்னலுக்கு விவசாயிகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கியதில் இதுவரை விவசாயிகள்’, விவசாய கூலி என 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 14 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Views: - 153

0

0