பைக் திருட்டு..! திருடன் எனக் கூறி கடத்திக் கொலை செய்யப்பட்ட நேபாளி..!

Author: Sekar
4 October 2020, 6:32 pm
Maharastra_Attack_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த 18 வயது நேபாள இளைஞன், திருட்டு சந்தேகத்தின் பேரில் 12 பேரால் கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இறந்த இளைஞர் பாரத் தாபா என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தபாஷ் ராவல் தனது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தாபா வேலை செய்யும் உணவகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். 

இதைத் தொடர்ந்து, அவர் தனது 11 நண்பர்களுடன் உணவு விடுதிக்குச் சென்று, தாபாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு மலாங் சாலை பகுதிக்கு சென்றார்.

அடுத்த நாள், ஹில் லைன் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட இடத்திலிருந்து தாபாவின் உடல் மீட்கப்பட்டது. கடத்திச் சென்ற குழு அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்து அவரது உடலை தெருவில் வீசி விட்டு தப்பி ஓடியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்பிறகு, காவல்துறையினர் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கினர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் நான்கு பேரைக் கைது செய்த காவல்துறை மற்றவர்களையும் தேடி வருகிறது.

Views: - 48

0

0