நீங்க விடுங்க விடாம போங்க, ஆனா நாங்க அனுமதிக்க மாட்டோம்..! மகாராஷ்டிரா அதிரடி முடிவு..!

24 May 2020, 12:26 am
Flight_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிரா அரசாங்கம் மே 19 தேதியிட்ட அதன் ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்யவில்லை என்றும், திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான நடவடிக்கைகள் ஒரு கட்டமாக தொடங்கப்படவிருந்தாலும் மாத இறுதி வரை மஹாராஷ்டிராவில் விமான பயணத்தை அனுமதிக்காது என்று தெளிவுபடுத்தியது.

மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகம் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், மே 19 தேதியிட்ட அதன் ஊரடங்கு உத்தரவை மாநில அரசு திருத்தவில்லை என்றும், ஆனால் அந்த உத்தரவின் கீழ் விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

புதன்கிழமை, உள்நாட்டு விமான பயணங்கள் தொடங்கப்படுவதாக அறிவித்த பின்னர், விமானப் பயணத்தை மலிவு விலையில் வைத்திருக்க புதிய கட்டண அமைப்பு இருக்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இந்த கட்டணக் கட்டமைப்பிற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவை மூன்று மாதங்களுக்கு அமைக்கிறது என்று அவர் கூறினார் உதாரணமாக டெல்லி-மும்பை விமான கட்டணம் ரூ 3500 ஆகவும், அதிகபட்ச நிலை ரூ 10000 ஆகவும் நிர்ணயிக்கப்படும். விமான வழித்தடங்கள் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. 40 நிமிடங்களுக்கும் குறைவான பறக்கும் நேரங்கள், 40 முதல் 60 நிமிடங்கள், 60-90 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150-180 நிமிடங்கள் மற்றும் 180 முதல் 210 நிமிடங்கள் வரை.

இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் இன்று 2,608 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளும் 60 இறப்புகளும் மாநிலத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மொத்தபாதிப்புகளின் எண்ணிக்கை 47,190 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,577 ஆகவும் உயர்ந்துள்ளது. இவற்றில், மும்பையில் மட்டும் 28,817 பாதிப்புகள் உள்ளன. மேலும் 949 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

Leave a Reply