கோவா முன்னாள் முதல்வர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை

16 August 2020, 9:54 pm
Quick Share

பனாஜி: கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. நாள்தோறும் அதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதிக தொற்றுகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் காணப்படுகிறது.

ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகம். பொதுமக்களை மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந் நிலையில் கோவா முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவராக இருந்த, மறைந்த மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவரது மகனின் பெயர் உத்பால் பாரிக்கர். தந்தையை போன்றே பாஜகவில் இயங்கி வருகிறார்.

உடல்நிலை பாதிக்கப்பட, அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அப்போது கொரோனா தொற்று உறுதியானது.  இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உத்பால் பாரிக்கர், தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது லேசான தொற்று தான் என்று கூறினார்.

ஆகையால் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொள்வேன் என்றும் தெரிவித்தார். ஆனால், மருத்துவர்கள் அளித்த அறிவுரையை அடுத்து, அவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

Views: - 0 View

0

0