‘கிரிக்கெட் விளையாடும்போது பாத்து விளையாடுங்க’! பந்து பட்டதால் ஆத்திரத்தில் 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு..!

15 February 2020, 5:29 pm
street - cricket - updatenews360
Quick Share

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடும் போது பந்து மேலே பட்டதால் எழுந்த ஆத்திரத்தில், 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஹ்ரி மாவட்டத்தில் உள்ள பேஹ்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், அங்கிருந்த ஒரு பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில், ராம்லால் மற்றும் பிஜேந்திர கண்டாரி ஆகிய இருவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், சிறுவன் ஒருவன் அடித்த பந்து ராம்லால் மீது பட்டது.

இதையடுத்து, ராம்லால் பக்கத்தின் கிடந்த பந்தை எடுப்பதற்காக மகேஷ் (12) என்னும் சிறுவன் சென்றான. அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பந்து மேலே பட்ட ஆத்திரத்தில் பிஜேந்திர கண்டாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனை நோக்கி சுட்டுள்ளார். இதில், சிறுவனின் வலது கண் பக்கத்தில் குண்டு பட்டு, அதிர்ஷ்டவசமாக பலத்த காயத்துடன் உயிர்தப்பினான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், துப்பாக்கியால் சுட்ட பிஜேந்திர கண்டாரி மற்றும் அவரது நண்பர் ராம்லால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர், நடத்தி விசாரணையில், மதுபோதையில் அமர்ந்திருந்த போது, பந்து பட்ட ஆத்திரத்தில் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தெரிய வந்தது.

Leave a Reply