கத்தி எடுத்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : குற்றவாளி தற்கொலை… ஆந்திரா அருகே பரபரப்பு!!

15 June 2021, 4:11 pm
Shooting Murder - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடப்பா மாவட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்த நபர் தனக்கு தானே சுட்டு சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்தலா கிராமம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த ஊராகும். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோதல், கொலை ஆகியவை அடிக்கடி நடைபெறும் அந்த பகுதியில் இன்று 2 பேர் இடையே மோதல் ஏற்பட்டது.

புலிவெந்தலா அருகில் உள்ள நல்லப்பரெட்டி பள்ளியில் வசிக்கும் பார்த்தசாரதி ரெட்டி, சிவா ரெட்டி ஆகியோருக்கு இடையே இன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இந்த மோதலில் இரண்டு பேரும் ஒருவரையொரவர் கடுமையாக தாக்கி கொண்ட நிலையில் பார்த்தசாரதி ரெட்டி தன்னிடமிருந்த கத்தியால் சிவா ரெட்டியை தாக்கி காயப்படுத்தினார்.

இதனால் ஆவேசமடைந்த சிவா ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து பார்த்தசாரதி ரெட்டி மீது சுட்டார். துப்பாக்கி சூட்டில் பார்த்தசாரதி ரெட்டி அதே இடத்தில் மரணமடைந்தார்.

தொடர்ந்து பார்த்தசாரதி ரெட்டியை சுட்டு கொலை செய்த சிவா ரெட்டி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

Views: - 238

0

0