வங்கியில் மெகா கொள்ளை…. கிலோ கணக்கில் நகைகள், ரூ.4 லட்சம் திருட்டு போன விவகாரம் : சதுரங்க வேட்டை நடத்திய பெண்… ஷாக் ரிப்போர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 1:18 pm
Andhra Bank Robbery - Updatenews360
Quick Share

ஆந்திராவில் வங்கி பெண் மேலாளரைக் கட்டிப் போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் விசாரணையில் வங்கி மேலாளர் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது அம்பலம்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காளஹஸ்தியில் இயங்கி வரும் தனியார் வங்கிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக வங்கி மேலாளர் ஸ்ரவந்தி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் 2 தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹார்டிஸ்க் மாயமானது நள்ளிரவு வரை வங்கி மேலாளர் வங்கியில் இருந்தது உள்ளிட்டவை சந்தேகத்தை ஏற்படுத்தவே வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வங்கி மேலாளர் ஸ்ரவந்தி பொதுமக்கள் அடமானமாக வைத்த தங்க நகைகளை வேறு வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக போலிகளை வைத்ததும், விரைவில் வங்கியில் தணிக்கை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் போலி நகைகள் வங்கியில் வைக்கப்பட்டது தெரியவரும் என அஞ்சி தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து சென்னையைச் சேர்ந்த மூன்று நபர்களுடன் ஒப்பந்தம் போட்டு வங்கியில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வங்கி மேலாளர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1274 கிராம் தங்கம் 840 கிராம் எடை கொண்ட போலி நகைகள் 3.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

வங்கி மேலாளர் ஸ்ரவந்தி இதர வங்கிகளில் வைத்து பணம் பெற்றுக்கொண்ட ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 753

0

0