வரும் 20ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!

Author: Aarthi
14 October 2020, 8:45 am
train - update news360
Quick Share

புதுடெல்லி: அக்.20ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை 392 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக, மே மாதத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

Train_Mumbai_Updatenews360

இந்நிலையில், இம்மாதம் துர்கா பூஜை, தசரா போன்ற பண்டிகைகளும், அடுத்த மாதம் தீபாவளி, சாத் பூஜை போன்ற பண்டிகைகளும் வர உள்ளதால், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களின் தேவை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, 392 பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்த ரயில்கள், இம்மாதம் 20ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30ந் தேதிவரை இயக்கப்படும். அதன்பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 33

0

0