தாயை துண்டு துண்டாக வெட்டிக்கொலை… உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த கொடூரம் ; 23 வயது மகள் கைது..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 6:11 pm
Quick Share

தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை லால்பக் பகுதியில் வசித்து வந்தவர் வீனா ஜெயின். இவருக்கு 23 வயதில் மகளும், மகனும் உள்ளனர். வீனா ஜெயின் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போய்விட்டதாக காலாசவுக் காவல்நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வீனா ஜெயினை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போனாத சொல்லப்பட்டு வந்த வீனா ஜெயின், அழுகிய நிலையில் சடலமாக அவரது வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி நிலையில், அலமாரி மற்றும் தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது மும்பை மாநகரையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் உள்ளே கதவை பூட்டியபடி அமர்ந்திருந்த அவரது மகள் ரிம்பிள் ஜெயினையும் போலீசார் கைது செய்தனர். தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ரிம்பிள் ஜெயினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 43

0

0

Leave a Reply