சாப்பாடு, மருந்து இன்றி தவித்த நோயாளிகள்…மத்திய அரசுதான் காரணம்: அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்?…மம்தா குற்றச்சாட்டு!!

Author: Aarthi Sivakumar
27 December 2021, 6:14 pm
Quick Share

டெல்லி: அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி இன் இந்தியா என்ற சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளும் மத்திய அரசால் முடக்கப்பட்டிருக்கிறது. அதுவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையால் அந்நிறுவனத்தை நம்பி இருக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் இன்றி கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் தான் என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார். அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவராத நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 297

0

0