46 ஆண்டுகளில் இல்லாத நிலைமை..! கனமழையால் தத்தளிக்கும் மும்பை…!

6 August 2020, 12:49 pm
Quick Share

மும்பை: 46 ஆண்டுகளில் இல்லாத கனமழையையும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் மும்பை நகரம் இப்போது சந்தித்து இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் பல மாநிலங்களில் மழையும் கொட்டி வருகிறது. அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையினால் தத்தளிக்கின்றன. அசாம் மாநிலத்தில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.

இந் நிலையில் மகாராஷ்டிராவிலும் கடந்த சில வாரங்களாக கனத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் மழை ஒரு சாதனையை படைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நேற்று மழை பதிவாகி இருக்கிறது.

மழையுடன் மணிக்கு 107 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேலும் இந்த கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகையால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொலாபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீ மழை பதிவாகி சாதனை படைத்துள்ளது.

1974ம் ஆண்டுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக பெய்த மழை பொழிவாகும்.  அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 46 சதவீதம் ஆகும். ஆனால் இந்த மாத தொடக்கத்தின் முதல் 5 நாட்களிலேயே 64 சதவீதம் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 52

0

0