ஆத்தீ..! ஆன்லைன் ஷாப்பிங்கில் இத்தனை போலி வலைதளங்களா..? மக்களே உஷார்..!
20 January 2021, 10:33 amபோலி ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்கள் குறித்து மும்பை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிமக்கள் அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி அரங்கேறி வரும் நிலையில், ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மும்பை காவல்துறை சில ஆன்லைன் ஷாப்பிங் மோசடி வலைத்தளங்களின் பட்டியலை வெளியிட்டது.
போலி ஷாப்பிங் வலைதளங்களின் பட்டியல் :
- shopiiee.com
- white-stones.in
- jollyfashion.in
- fabricmaniaa.com
- takesaree.com
- assuredkart.in
- republicsaleoffers.myshopify.com
- fabricwibes.com
- efinancetic.com
- thefabricshome.com
- thermoclassic.site
- kasmira.in
“போலி தளங்களின் இருண்ட வலையில் விழாதீர்கள்! குஜராத்தைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணரை மும்பை சைபர் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் ஒரு போலி ஆன்லைன் ஷாப்பிங் மோசடி வெளிக்கொணரப்பட்டுள்ளது.
வீட்டு பொருட்களை விற்கும் போலி வலைத்தளங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 22,000 பிளஸ் நபர்களை ₹70 லட்சத்துக்கு மேல் மோசடி செய்தனர்.” என மும்பை காவல்துறை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
0
0